Home > Social Work
2

 

சமுதாயப் பணிகள்:

இங்கு கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு நற்பண்புகளையும், இவர்கள் எதிர்காலத்தில் தன்னை சுற்றியுள்ள சமுதாயத்தை பாதுகாக்கும் கடமையை பள்ளி பருவத்திலேயே கற்றுத்தருகிறோம். இதன் மூலம் மரம் வளர்ப்பது, பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மையாக்குவது, மழை நீர் சேகரிப்பு, இயலாதோருக்கு உதவுதல் மற்றும் முதியோர்களை அரவணைத்தல் ஆகியவற்றை கற்றுத்தருவதோடு மட்டுமல்லாமல் செயல்படவும் உதவுகிறோம்.

 பள்ளி தோட்டம்:

பள்ளி வளாகத்தில் சுமார் 850க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளது. இவை அனைத்தும் இங்கு பயிலும் மாணவ-மாணவியர்களால் நடப்பட்டு அவர்களாலேயே பராமரிக்கப்படுகிறது.