Home > முகப்பு

ஒரு மனிதனுடைய வாழ்வில் ஐம்புலன்கள் என்பது இன்றியமையாதது. இதில் ஏதாவது ஒரு புலன் குறைந்தாலும் வாழ்க்கை என்பது மிக கடினமாக செல்லக் கூடியது. ஆனால் கேட்கும் மற்றும் பேசும் புலன்களை இழந்து இச்சமுதாயத்தில் பிறரோடு இணைந்து வாழ்வது வாழ்க்கையில் என்பது வேதனைக்குரியது. அவ்வாறு காதுகேளாத, வாய் பேச இயலாமல் உள்ளவர்களுக்காக இயங்கும் சிறப்பு நிறுவனமாக இந்நிறுவனம் துவங்கப்பட்டது.

“ செவித்திறன் குறைபாடு உடையவர்களால் எதையும் கேட்க இயலாது, பேச இயலாது. எந்த மொழியில் எந்தக்கேள்வியை கேட்டாலும் அதற்கான பதிலை சொல்ல இயலாது. அவர்களது உலகத்தில் எந்த மொழியும் இல்லை, எந்த சொற்களும் இல்லை. அவர்களது கைவிரல்களும், முகபாவனைகளும், விழியின் அசைவுகளும். உள்ளத்துக் கதைகளை உரக்கச் சொல்லி கொண்டிருக்கின்றன. இவர்கள் எவ்வளவு பெரிய மனித கூட்டத்திலும் தனிமையிலேயே இருக்கிறார்கள். அவர்களின் மொழி பேசும் ஒருவரை சந்திக்கும் வரையிலும் ஏதும் பேசாது மௌனமாக இந்த உலகத்தை தங்களது கண்களால் கவனித்து கொண்டிருக்கிறார்கள்.

செவித்திறன் குறைபாடு உடையவர்கள் நடைமுறை வாழ்ககையில் சந்திக்கும் பிரச்சனைகளை எந்த கதைகளும், கட்டுரைகளும், நூல்களும், திரைப்படங்களும் பதிவு செய்வதில்லை. அவர்களின் மன உணர்வுகளை, துன்பங்களை, இயலாமையை இந்த அவசர கதியில் இயங்கி கொண்டிருக்கும் இந்த மனித சமூகம் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை.”

இவ்வாறான இச்சமுதாய ஓட்டத்தில் அனைவரும் ஒரிரு நிமிடங்கள் நின்று இவர்களை கவனிக்க செய்வதே முக்கிய நோக்கமாக கொண்டு, காதுகேளாதோரின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு உயிருட்டும் விதத்தில் இயங்குவதே இந்நிறுவனத்தின்; மிகப்பெரிய முயற்சியாகும்.

நிறுவனத்தின் தோற்றம் :-

இந்நிறுவனம் காதுகேளாத குழந்தைகளின் வளர்ச்சிக்காக நடைபெறும் தன்னார்வ தொன்டு நிறுவனம் ஆகும். இக்குழந்தைகளின் வளர்ச்சிக்காகவும், உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்க்காகவும் நடைபெறும் ஒரு நிறுவனமாகும்.

நமது இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளாக திருப்பூரிலும் அதன் 60கிமீ சுற்றளவிலும் காது கேளாதோருக்கென ஒரு சிறப்பு பள்ளி ஏதும் இல்லை. திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள காது கேளா குழந்தைகள் கல்வி பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் பள்ளி செல்லாமல் இருந்த இவர்கள், குழந்தை தொழிலாளர்களாக பணி செய்து கொண்டிருந்தனர்.  அவர்கள் எவ்வித சந்தோசங்களும்  இல்லாமல் ஒரு இயந்திரத்தை போல் இயங்கி கொண்டு இருந்தனர்.

இவர்களின் நிலையை கண்டு, இவர்களை நல்வழி படுத்தி கல்வி பெறச் செய்யும் நோக்கத்தோடு, காது கேளாத குழந்தைகளுக்கான சிறப்பு நிறுவனமாக 10.10.1997ஆம் ஆண்டு இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

காதுகேளாத குழந்தைகளுக்காக இலவச விடுதி வசதியோடு 7 குழந்தைகளுடன் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தில், தற்போது சுமார் 350 மாணவ-மாணவியர் வரை தங்கி பயில்கின்றனர். 2002ஆம் ஆண்டில் அறக்கட்டளையின் கீழ் பதிவு செய்யப்பட்டு காதுகேளாதோருக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இங்கு பயிலும் மாணவ-மாணவியருக்கு உணவு, உடை, தங்குமிடத்தோடு அனைத்து அடிப்படை வசதிகளும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. இப்பளி;யின் மூலம் 350 குழந்தைகள் நேரடியாகவும். சுமார் 500நபர்கள் வரை மறைமுகமாகவும் பயனடைகின்றனர்.