Home > நிறுவனர்

திருப்பூரைச் சார்ந்த திரு.முருகசாமி என்பவரால் அக்டேபர் மாதம் 10ம் தேதி 1997ஆம் ஆண்டு இப்பள்ளி துவங்கப்பட்டது. இப்பள்ளியின் நிறுவனர் திரு.மு.முருசகாமி அவர்களுக்கும் காது கேட்காது.இவர் காதுகேளாத ஏழை குழந்தைகளுக்காக ஒரு இலவச சிறப்பு பள்ளி துவங்குவதை தனது லட்சிய கனவாக கொண்டு இருந்தார். இவர் கோவையில் உள்ள காதுகேளாதோருக்கான மாநகராட்சி பள்ளியில் பள்ளி படிப்பை முடித்து உள்ளார். தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக படிப்பை தொடர முடியவில்லை.

இவர் 1986 ஆம் ஆண்டு முதலே காதுகேளாதவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். “திருப்பூர் காதுகேளாதோர் சங்கம்” ஒன்றை துவங்கி அதன் மூலமாக பல்வேறு காதுகேளாதோர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி, விழிப்புணர்வு கூட்டங்கள், சட்ட ஆலோசனைகள் போன்றவற்றை வழங்கி வந்தார். இதன் மூலம் பலர் பயனடைந்துள்ளனர்.

காதுகேளாத, வாய் பேச இயலாத தேசிய கால்பந்தாட்ட விளையாட்டு வீரரான பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வந்தபோதிலும், அவரின் நெஞ்சின் மையப்பகுதியில் காதுகேளாத குழந்தைகளுக்கு பள்ளி துவங்குவதையே எண்ணி கொண்டு இருந்த இவர் 1997ஆம் ஆண்டு தன் கனவிற்கு உயிர் கொடுத்தார்.

வாழ்நாள் லட்சியம்

அக்டோபர் 10, 1997ல் 7 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர்களுடன் பள்ளி துவங்கப்பட்டது. ஒரு சில மாதங்களில் குழந்தைகளின்  எண்ணிக்கை உயர்ந்தது. குழந்தைகள் அனைவரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தும், தொலைதூர கிராமங்களில் இருந்தும் வந்து இப்பள்ளியில் தங்கி பயில ஆரம்பித்தனர். குழந்தைகள் மிகுந்த அறிவு கூர்மையுடனும், கற்று தருவதை எளிதில் கற்று கொள்ளும் திறமையுடனும், பள்ளியில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் கற்றுக்கொள்வதை கண்ட நிறுவனர், இக்குழந்தைகள் சிறப்பான கல்வி அளித்து, சிறந்த   எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.

பள்ளிக்காக கட்டிடம் கட்ட…

நிறுவனருக்கு சொந்தமான அவர்களது தாயாரால் முருகம்பாளையம் என்ற இடத்தில் வழங்கப்பட்ட 33சென்ட் நிலத்திலேயே பள்ளிக்காக கட்டிடம் கட்ட முடிவெடுத்தார். நிறுவனர் அவர்கள் பள்ளியின் நிதிக்காக பள்ளியிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உதவியோடு பல்வேறு நன்கொடையாளர்களை சந்தித்து, அவர்களின் உதவியோடு பள்ளிக்காக கட்டிடம் கட்டினார்.

இது காதுகேளாத ஏழை மாணவர்களுக்காக செயல்படும் பள்ளியாதலால் ஒவ்வொரு ஆண்டும் மாணவரின் எண்ணிக்கை அதிகரித்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கு வந்து விடுதியல் தங்கி இலவச கல்வி பெற்று வந்தனர். 2007ஆம் ஆண்டு வரை நடுநிலை பள்ளியாக இருந்து 2008ஆம் ஆண்டில் உயர்நிலை பள்ளியாக உயர்ந்தது, பிறகு 2011ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்தது.

பள்ளி செயல்பட்டு வந்த முருகம்பாளையம் இடத்தில் இடவசதி பற்றாக்குறையினால்ää இவ்விடத்தில் இருந்து 15கிமீ தொலைவில்ää 2ஏக்கர் நிலப்பரப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு, எட்டாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 2008ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது.

epWtdUf;F nrhe;jkhd mth;fsJ jhahuhy; KUfk;ghisak; vd;w ,lj;jpy; toq;fg;gl;l 33nrd;l; epyj;jpNyNa gs;spf;fhf fl;blk; fl;l KbntLj;jhh;. epWtdh; mth;fs; gs;spapd; epjpf;fhf gs;spapYs;s Mrphpah;fs; kw;Wk; gzpahsh;fspd; cjtpNahL gy;NtW ed;nfhilahsh;fis re;jpj;J>mth;fspd; cjtpNahL gs;spf;fhf fl;blk; fl;bdhh;.

 

,J fhJNfshj Vio khzth;fSf;fhf nray;gLk; gs;spahjyhy; xt;nthU Mz;Lk; khzthpd; vz;zpf;if mjpfhpj;jJ. jkpofj;jpd; gy;NtW khtl;lq;fspy; ,Ue;Jk; khzth;fs; ,q;F te;J tpLjpay; jq;fp ,ytr fy;tp ngw;W te;jdh;. 2007Mk; Mz;L tiu eLepiy gs;spahf ,Ue;J 2008Mk; Mz;by; cah;epiy gs;spahf cah;e;jJ> gpwF 2011Mk; Mz;L Nky;epiyg;gs;spahf juk; cah;e;jJ.

 

gs;sp nray;gl;L te;j KUfk;ghisak; ,lj;jpy; ,ltrjp gw;whf;Fiwapdhy;> ,t;tplj;jpy; ,Ue;J 15fpkP njhiytpy;> 2Vf;fh; epyg;gug;gpy; Gjpa fl;blq;fs; fl;lg;gl;L> vl;lhk; tFg;G Kjy; 12Mk; tFg;G tiu 2008Mk; Mz;by; ,Ue;J ,aq;fp tUfpwJ.