Home > குழந்தைகள்

இங்கு தங்கி கல்வி பயிலும் குழந்தைகள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொலைதூர கிராமங்களை சார்ந்தவர்கள். சமூகத்திலும் , பொருளாதாரத்திலும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள். இவர்களின் பெற்றோர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையிலும்,  காதுகேளா குழந்தைகளுக்கென உள்ள சிறப்பு பள்ளிகள் பற்றியும், ஊனத்தை பற்றியும் அதன் தன்மை பற்றியும் போதிய விழிப்புணர்வு இல்லாதவராக உள்ளனர்.

மிகவும் வறுமை நிலையிலுள்ள இக்குழந்தைகளில் சிலர் பெற்றோரை இழந்தவர்களாகவும், ஒரு பெற்றோரை  மட்டும் கொண்டவர்களாகவும்  உள்ளனர்.

இங்கு பயிலும் அனைத்து மாணவர்களும் சுதந்திரமாகவும், கண்ணியத்தோடும் மிகவும் மனமகிழ்ச்சியோடு நல்ல நிலையில் உள்ளனர். மாணாக்கர்கள் அனைவருக்கும் இப்பள்ளி நல்ல வழிகாட்டியாய் உள்ளது. இவர்கள் கல்வியோடு தன்னை சுற்றியுள்ள சமுதாயத்தை பற்றியும், உலக செய்திகளையும், பொது கருத்துக்களையும் கற்றுக்கொள்கின்றனர். தங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும், மன விருப்பங்களையும் தன் நண்பர்களோடும், பிற ஆசிரியர்களோடும் பகிர்ந்து கொள்கின்றனர்.