Home > எதிர் காலத்திட்டம்

நிறுவனருக்கு சொந்தமான அவர்களது தாயாரால் முருகம்பாளையம் என்ற இடத்தில் வழங்கப்பட்ட 33சென்ட் நிலத்திலேயே பள்ளிக்காக கட்டிடம் கட்ட முடிவெடுத்தார். நிறுவனர் அவர்கள் பள்ளியின் நிதிக்காக பள்ளியிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உதவியோடு பல்வேறு நன்கொடையாளர்களை சந்தித்து, அவர்களின் உதவியோடு பள்ளிக்காக கட்டிடம் கட்டினார்.

இது காதுகேளாத ஏழை மாணவர்களுக்காக செயல்படும் பள்ளியாதலால் ஒவ்வொரு ஆண்டும் மாணவரின் எண்ணிக்கை அதிகரித்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கு வந்து விடுதியல் தங்கி இலவச கல்வி பெற்று வந்தனர். 2007ஆம் ஆண்டு வரை நடுநிலை பள்ளியாக இருந்து 2008ஆம் ஆண்டில் உயர்நிலை பள்ளியாக உயர்ந்தது பிறகு 2011ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்தது.

பள்ளி செயல்பட்டு வந்த முருகம்பாளையம் இடத்தில் இடவசதி பற்றாக்குறையினால், இவ்விடத்தில் இருந்து 15கிமீ தொலைவில், 2ஏக்கர் நிலப்பரப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு, எட்டாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 2008ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது.

நூலகம்

பள்ளி நூலகத்தில் சுமார் 1500 புத்தகங்கள் வரை உள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் நூலக வகுப்பு ஒதுக்கப்படுகிறது. மாணவர்களின் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடும் இவ்வகுப்பு நடைபெறுகிறது. இதன் மூலம் மாணவர்கள் பல நூல்களை கற்றுக் கொள்கின்றனர்.

இந்த கற்றல் திறன் , மாணவர்களின் கற்பனை திறனை ஊக்குவித்து, நாடங்கள் இயக்குவது, மௌன நாடகம் போன்றவற்றிற்கு உதவுகிறது. இவர்கள் பள்ளி விழாக்களில் தாங்கள் படித்த கதைகளை கொண்டு நாடகங்களை இயற்றி அவர்களே நடிப்பர். இவர்களின் அதித ஆர்வத்திற்கு ஆசிரியர்களும் உதவுவர்.

 

கணினி பயிற்சி

இன்றைய காலகட்டத்தில் அனைவரின் வாழ்விலும் கணினி என்பது ஒரு அத்தியாவசியமான இடத்தை வகிக்கிறது. எனவே கணினியின் அவசியத்தை உணர்ந்து, இங்கு பயிலும் மாணவ-மாணவியருக்கு எட்டாம் வகுப்பு முதலே கணினியை பற்றிய அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

மாணவர்கள் பள்ளி கல்வி முடித்த பிறகு அவர்கள் கணினி துறையில் பயிற்சி பெற விரும்பினால் அவர்களுக்கு Photoshop, Corel Draw, Designing, Ms office போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. மேலும் அவர்களே சுயதொழில் செய்யவும் இப்பயிற்சி அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.