Home > நிறுவனத்தின் தோற்றம்

இந்நிறுவனம் காதுகேளாத குழந்தைகளின் வளர்ச்சிக்காக நடைபெறும் தன்னார்வ தொன்டு நிறுவனம் ஆகும். இக்குழந்தைகளின் வளர்ச்சிக்காகவும், உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்க்காகவும் நடைபெறும் ஒரு நிறுவனமாகும்.

நமது இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளாக திருப்பூரிலும் அதன் 60கிமீ சுற்றளவிலும் காது கேளாதோருக்கென ஒரு சிறப்பு பள்ளி ஏதும் இல்லை. திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள காது கேளா குழந்தைகள் கல்வி பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் பள்ளி செல்லாமல் இருந்த இவர்கள், குழந்தை தொழிலாளர்களாக பணி செய்து கொண்டிருந்தனர்.  அவர்கள் எவ்வித சந்தோசங்களும்  இல்லாமல் ஒரு இயந்திரத்தை போல் இயங்கி கொண்டு இருந்தனர்.

இவர்களின் நிலையை கண்டு, இவர்களை நல்வழி படுத்தி கல்வி பெறச் செய்யும் நோக்கத்தோடு, காது கேளாத குழந்தைகளுக்கான சிறப்பு நிறுவனமாக 10.10.1997ஆம் ஆண்டு இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

காதுகேளாத குழந்தைகளுக்காக இலவச விடுதி வசதியோடு 7 குழந்தைகளுடன் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தில், தற்போது சுமார் 350 மாணவ-மாணவியர் வரை தங்கி பயில்கின்றனர். 2002ஆம் ஆண்டில் அறக்கட்டளையின் கீழ் பதிவு செய்யப்பட்டு காதுகேளாதோருக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இங்கு பயிலும் மாணவ-மாணவியருக்கு உணவு, உடை, தங்குமிடத்தோடு அனைத்து அடிப்படை வசதிகளும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. இப்பளி;யின் மூலம் 350 குழந்தைகள் நேரடியாகவும், சுமார் 500நபர்கள் வரை மறைமுகமாகவும் பயனடைகின்றனர்.